சக்திவாய்ந்த அரசியல்வாதியின் மனைவி உட்பட ஐந்து அரசியல்வாதிகள் மிக விரைவில் கைது..?
சக்திவாய்ந்த அரசியல்வாதி ஒருவரின் மனைவி உட்பட ஐந்து அரசியல்வாதிகள் மிக விரைவில் கைது செய்யப்படுவார்கள் என அரசாங்க வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்திகள் கசிந்துள்ளன.
பல்வேறு மோசடிகள் மற்றும் ஊழல்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்பிலேயே இந்த கைது செய்யப்பட உள்ளது.
வெளிநாடுகளுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்புவதாக கூறி பணத்தை மோசடி செய்த அரசியல்வாதி, எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் உட்பட , சுற்றுலா சபையின் முறைகேடுகளில் ஈடுபட்ட தலைவர்கள் என பலர் கைது செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், மிக் விமான ஒப்பந்தத்தில் மோசடியில் ஈடுபட்ட பிரதிவாதிகள் குழு, மத்திய வங்கி பிணைமுறி ஒப்பந்தத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் என பத்துக்கும் மேற்பட்டோர் தொடர்பிலும் விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.