முன்னாள் அமைச்சர் ஒருவரின் பல கோடி பெறுமதியான வாகனங்களை , ஊழல் தடுப்புப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்!
நான்கரை கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான வாகனங்கள், மேல் மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு சொந்தமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது
மூன்று சொகுசு வாகனங்களை வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
பாணந்துறை பின்வத்த பிரதேசத்தில் உள்ள முன்னாள் அமைச்சரின் வீட்டில் இருந்து வெளிநாட்டு ஆயுதப்படைகளுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இராணுவ ஜீப் போன்ற ஜீப் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு முதலில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
இரத்மலானை புகையிரத நிலையத்திற்கு அருகில் மேலும் இரண்டு சொகுசு ஜீப் வண்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கைப்பற்றப்பட்ட ஜீப் வண்டிகள் சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு, அரச நிறுவனங்களில் இருந்து பெறப்பட்ட இலக்கங்களின் கீழ் அசெம்பிள் செய்யப்பட்டு பதிவு செய்யப்பட்டவை எனவும் தகவல் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.