பொலிஸ் உயர்பீடங்களில் பலர் எதிர்வரும் நாட்களில் மாற்றப்பட உள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிப்பு .

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் தளபதி, பொலிஸ் நிர்வாக திணைக்களத்தின் தலைவர் உட்பட பொலிஸ் உயர்பீடங்கள் பல எதிர்வரும் நாட்களில் மாற்றப்பட உள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேல், கிழக்கு, வடமேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்களும் மாற்றப்பட உள்ளதாக பொலிஸ் தலைமையகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் திரு.திலக் தனபால மேல் மாகாணத்திற்கு அண்மித்த மாகாணத்திற்கு இடமாற்றம் செய்யப்படவுள்ள போதிலும், வடக்கின் பொதுமக்கள் அவரை அதிகம் விரும்புவதாலும், மக்களின் கோரிக்கையின் பேரிலும் பேச்சுக்கள் மட்டுமே இடம்பெற்று வருகின்றன.

இந்த இடமாற்றங்கள் தொடர்பில் பொலிஸாரின் முன்மொழிவுகளை பதில் பொலிஸ் மா அதிபர் ஏற்கனவே தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு சிபாரிசு செய்துள்ளதாகவும், அதன்படி தேசிய பொலிஸ் ஆணைக்குழு கூட்டம் இன்று (02) இந்த முன்மொழிவுகளை பரிசீலிக்க உள்ளதாகவும் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.