கிளீன் சிறீலங்கா போன்று இனப்பிரச்சினையையும் கிளீன் செய்ய வேண்டும் இந்த அரசு என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

இந்த அரசு கிளீன் சிறீலங்கா போன்று இனப்பிரச்சினையையும் கிளீன் செய்ய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் நேற்று(01) அவர் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே குறித்த விடயத்தை தெரிவித்தார்.
மலர்ந்திருக்கும் புதுவருடம் இன ஒற்றுமையுடன் கூடிய இனப்பிரச்சனையை தீர்த்து வைக்கும் அவர்களின் இலக்கை அடையும் புதுவருடமாக அமையும் என்ற எதிர்பார்ப்போடு காலடி எடுத்து வைக்கின்றோம்.
இலங்கை நாட்டில் வருமானம் தரக்கூடிய பொருளாதாரம் எவையும் இல்லை பொருந்தோட்ட பொருளாதாரமும் இல்லை சுற்றுலாப்பயணிகளின் வருகையை மட்டும் தான் பார்த்திருக்கிறார்கள்.
இலங்கை உலக நாடுகள் மற்றும் நாணய நிதியத்திடம் வாங்கிய கடனை கட்டுவதென்றால் உடனடி வழிமுறை கூட இல்லை நெல் உற்பத்தியும் வீழ்ச்சியடைந்துள்ளது.
இலங்கையின் கைத்தொழில் துறையும் எதிர்பார்த்த இலாபத்தை அடையவில்லை இலங்கை அரசாங்கம் கிளீன் சிறிலங்கா போன்று புரையோடிப்போய்யுள்ள இனப்பிரச்சனைக்கும் கிளீன் திட்டத்தை கொண்டு வருவார்களாக இருந்தால் உலகத்திலுள்ள தமிழர்களின் நிதியுடன் வடக்கு கிழக்கில் புதிய அபிவிருத்தியை அரசாங்கம் உருவாக்க தயார்.
ஆனால் இலங்கையின் பொருளாதாரத்திலும் ஒரு மாற்றத்தை கொண்டு வரும் இங்குள்ள பல தொழிற்ச்சாலைகள் இன்னும் இயங்க முடியாது உள்ளது. இவற்றை இயக்குவதற்கான பண பலத்தை உலகத்தமிழர்கள் கொண்டுள்ளனர்.
என்னதான் இருந்தாலும் என்பது ஆண்டுகளாகவுள்ள இனப்பிரச்சினைக்கு இதயசுத்தியுடன் ஒரு பிரச்சனையை அடையாளம் காண்பார்களாயின் அதிலும் இந்த அரசு இதை காணுமாயின் அது ஒரு புதிய மாற்றத்தை இலங்கைக்கு கொடுக்கும் சிங்கள மதகுமார்களிடமும் சிங்கள மக்களிடமும் தற்போதும் இனப்பிரச்சனை விடயத்தில் பௌத்த இதிகாசங்களோடே வாழ்கின்றனர்.
இவற்றிலிருந்து வெளியே வரவேண்டும் பொலிஸ்இ காணி அதிகாரங்களை தந்து நாங்கள் சுயாட்சியாக வாழ வழிவிடவேண்டும் எப்பொழுதும் சமாதானமாக பேசுவதற்கு எங்களுடைய சமாதான கதவுகள் எப்பொழுதும் திறந்திருக்கும் என தெரிவித்தார்.