சுத்தமான இலங்கை நிகழ்ச்சித் திட்டம் பொதுமக்களின் தீவிர பங்களிப்புடன் மட்டுமே வெற்றியடைய முடியும்.
எமது பொருளாதார அமைப்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண தேவையான பொருளாதார நிகழ்ச்சி நிரலை இந்த புத்தாண்டில் நடைமுறைப்படுத்த தயாராக உள்ளோம்.
எங்களது ஆரம்ப அணுகுமுறையை குறிப்பிடத்தக்க அளவிற்கு வெற்றிகரமாக முடித்துள்ளோம். இந்த நாட்டின் மீட்சிக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் நாங்கள் சரியான முறையில் தயார் செய்துள்ளோம்.
நமது நாடு, நமது குடிமக்களுக்கு ஒரு புதிய மதிப்புடனான அமைப்பொன்று தேவை என்பது குறிப்பிடத்தக்கது. “சுத்தமான இலங்கை/ Clean SriLanka” நிகழ்ச்சித் திட்டம் பொதுமக்களின் தீவிர பங்களிப்புடன் மட்டுமே வெற்றியடைய முடியும். இலங்கை தேசத்தின் ஒவ்வொரு குடிமகனும் தனக்கு ஒதுக்கப்பட்ட பொறுப்புக்கு உணர்வுடன் பங்கேற்க வேண்டும்
இவ்வாறு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்றைய Clean SriLanka தொடக்க விழாவில் தெரிவித்தார்.