பிறப்பு வீதம் கடுமையான வீழ்ச்சியடைந்துள்ளது!
பிள்ளைகள் பிறக்கும் வீதம் சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ளதாக சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலை குழந்தைகள் வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். 350,000 ஆக பிறப்பு எண்ணிக்கை 2024 ஆம் ஆண்டு 250,000 ஆக குறைவைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
வெளிநாட்டுக்கு பலர் சென்றுள்ளதனாலும், நாட்டின் பொருளாதார நிலையை கருத்திற் கொன்டு பிள்ளை பெறுவதனை பலர் தள்ளிப்போட்டு வருவதாகும், பலர் குழந்தை பிறப்பை கட்டுப்படுத்தியுள்ளதாகவும் கூறியுள்ள அவர் பலர் திருமணம் செய்வதனையும் தவிர்த்தது வருவதாகும் மேலும் கூறியுள்ளார். கடந்த 30 வருடங்களுடன் ஒப்பிடுகையில் இது கடுமையான வீழ்ச்சி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலை தொழிலாளர் பற்றாக்குறையை எதிர்காலத்தில் உருவாக்குமெனவும், முதியோரின் எண்ணிக்கையினை அது அதிகரிக்கும் எனவும் தீபால் பெரேரா எச்சரித்துள்ளார். தற்போதுள்ள பிள்ளைகளின் எண்ணிக்கை பேணப்படவேண்டுமெனவும், தவறினால் எதிர்காலத்தில் தொற்றா நோய்கள் ஏற்படும் அபாயம் காணப்படுவதாகவும், உளவியல் சம்மந்தப்பட்ட சிக்கல் நிலைகள் உருவாகலாமெனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
சரியான ஊட்டச்சத்துக்களை வழங்கி குழந்தைகளை நோய்களின்றி சுகதேகிகளாக வளர்க்க வேண்டியது அவசியமெனவுவம், பிறந்த குழந்தைகளுக்கு முதல் 6 மாதங்களுக்கு தாய்ப்பால் வழங்குவது கட்டாயமெனவும், அதன் மூலமே ஆரோக்கியமான பிள்ளைகளையும் எதிர்காலத்தையும் உருவாக்க முடியுமெனவும் குழந்தைகள் வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா பெற்றோருக்கு அறிவுறுத்தியுள்ளார்.