முதன் முறையாக அழுத ராணவ்! பிக்பாஸ் செய்த தரமான சம்பவம்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் ஆரம்பமாகி போட்டியாளர்கள் பயங்கரமாக விளையாடி வருகின்றனர்.
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியானது கடந்த அக்டோபர் மாதம் 6ம் திகதிஆரம்பமானது. ஆரம்பத்தில் பரபரப்பில்லாமல் போய்கொண்டிருந்த நிகழ்ச்சி தற்போது பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் நடந்து வருகிறது.
நிகழ்ச்சி முடிவதற்கு இன்னும் 2 வாரங்கள் மட்டுமே உள்ளதால் போட்டியாளர்கள் உட்சாகத்துடனும் ஆர்வத்துடனும் விளையாடிக்கொண்டு வருகின்றனர்.
கடந்த வாரத்தில் ஜெப்ரி மற்றும் அன்ஷிதா இருவரும் வெளியேறியுள்ள நிலையில், தற்போது 10 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளே இருக்கின்றனர்.
இதில் இந்த வாரத்திற்கு ராணவ், விஷால், பவித்ரா, அருண், தீபக், மஞ்சரி, ரயான், ஜாக்குலின் என 8 பேர் நாமினேட் ஆகியுள்ளனர்.
இந்த நிலையில் தற்போத டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது. இன்றைய டாஸ்கில் 365 செகன்டில் 5 லிட்டர் தண்ணீரை குடிக்க வேண்டும் என பிக் பாஸால் அறிவுறுத்தப்பட்டது