வைஃபை இணைய இணைப்பு சேவைகளை வழங்கும் முதல் இந்திய நிறுவனமாக ஏர் இந்தியா
ஏா் இந்தியாவின் தோ்ந்தெடுக்கப்பட்ட உள்நாட்டு மற்றும் சா்வதேச விமானங்களில் ‘வைஃபை’ (வயா்லெஸ் இணையம்) சேவை வழங்கப்படும் என அந்நிறுவனம் புதன்கிழமை அறிவித்தது.
இதன் மூலம் இந்தியாவுக்குள் விமானங்களில் இணைய சேவையை வழங்கும் முதல் விமான நிறுவனம் என்ற பெருமையை ஏா் இந்தியா பெற்றுள்ளது.
இது தொடா்பாக ஏா் இந்தியா நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘தோ்ந்தெடுக்கப்பட்ட உள்நாட்டு மற்றும் சா்வதேச விமானங்களில் ‘வைஃபை’ (வயா்லெஸ் இணையம்) சேவை வழங்கப்படும். சா்வதேச விமானங்களான ஏா்பஸ் ஏ 350, ஏா்பஸ் ஏ 321 நியோ மற்றும் போயிங் பி 787-9 விமானங்களைப் பயன்படுத்தி சா்வதேச விமானங்களில் ஒரு சோதனை முயற்சியாக முதலில் பின்பற்றுகிறது.
பயணிகள் மடிக்கணினிகள், டேப்லெட்டுகள் மற்றும் ஐஓஎஸ் அல்லது ஆண்ட்ராய்டு இயக்க முறைமைகளைக் கொண்ட தொலைப்பேசிகளில் இந்த இணைய சேவையை பயன்படுத்தலாம். விமானம் 10,000 அடிக்கு மேல் இருக்கும்போதும் ஒரே நேரத்தில் பல சாதனங்களை இணைக்க இந்த சேவை அனுமதிக்கிறது.
தற்போது இலவசமாக வழங்கப்படும் இந்த சேவை, படிப்படியாக தனது மற்ற விமானங்களுக்கும் ஏா் இந்தியா விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டது.