பாராளுமன்ற ஊழியர்களின் கொடுப்பனவுகளை இனி வழங்கப்போவதில்லை என தீர்மானம்.
பாராளுமன்ற ஊழியர்களுக்கான விடுமுறை கொடுப்பனவை வழங்குவதில்லை என தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நிலவும் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
நாடாளுமன்ற ஊழியர்களுக்கு மாத்திரம் இந்த கொடுப்பனவு வழங்கப்படுமாயின் , அது மோசமான முன்னுதாரணமாக அமையும் என பொருளாதார ஆலோசகர்கள் சுட்டிக்காட்டியதன் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் பணியாற்றும் சுமார் 1200 பணியாளர்கள் இந்த கொடுப்பனவைப் பெறுவதற்கு தகுதியுடையவர்களாக இருந்தனர்.
இந்த கொடுப்பனவை வழங்குமாறு பாராளுமன்ற ஊழியர் குழுவொன்றும் அரசாங்க தலைவர்களை சந்தித்து கடந்த நாட்களில் கோரிக்கை விடுத்திருந்தது.