இத்தாலியின் மிலான் நகரின் , பொது இடங்களில் புகைக்கத் தடை.

இத்தாலியின் மிலான் நகரில் (Milan) பொது இடங்களில் புகைப்பதற்கான தடை நேற்று (1 ஜனவரி) நடப்புக்கு வந்தது.

தடையை மீறுவோருக்கு 40 யூரோ முதல் 240 யூரோ வரை (சுமார் 56 வெள்ளி முதல் 340 வெள்ளி வரை) அபராதம் விதிக்கப்படலாம்.

தெருக்களிலும் கூட்டமான பொது இடங்களிலும் புகைபிடிக்கக் கூடாது.

சிலர் தடையை எதிர்த்துக் குரல் எழுப்பியுள்ளனர்.

வெளிப்புறங்களில் புகைபிடிக்கக் கூடாது என்று சொல்வது ஒருவரது சுதந்திரத்தைப் பறிப்பது போன்றது என்று அவர்கள் கூறினர்.

புகைபிடிப்பது காற்றுத் தூய்மைக்கேட்டை ஏற்படுத்துவதால் தடையை ஆதரிப்பதாக மற்ற சிலர் கூறுகின்றனர்.

2020இல் மிலானில் காற்றுத் தரத்திற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டது. புகைபிடிப்பதற்கு எதிராகப் படிப்படியாகக் கடுமையான தடைகளைக் கொண்டு வர அது பரிந்துரைத்தது.

2021இல் பூங்காக்கள், விளையாட்டு இடங்களில் புகைபிடிப்பது தடை செய்யப்பட்டது.

நகரின் காற்றுத் தரம், குடிமக்களின் ஆரோக்கியம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு தடை விதிக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

Leave A Reply

Your email address will not be published.