உலக மக்கள்தொகை 8.1 பில்லியன்…இந்தியா ஆக அதிகமான மக்கள்தொகை கொண்ட நாடு ஆகியது.
இவ்வாண்டு (2025) ஜனவரி முதல் தேதி உலக மக்கள்தொகை சுமார் 8.1 பில்லியனை எட்டியதாகக் கூறப்படுகிறது.
மக்கள்தொகை கடந்தாண்டில் சுமார் 71 மில்லியன் அதிகரித்துள்ளதாக அமெரிக்கக் கணக்கெடுப்புப் பிரிவு தெரிவித்தது.
2024இல் இந்தியா ஆக அதிகமான மக்கள்தொகை கொண்ட நாடாக இருந்தது.
இந்தியாவின் மொத்த மக்கள்தொகை சுமார் 1.4 பில்லியன்.
சென்ற ஆண்டு (2024) அமெரிக்காவின் மக்கள்தொகை 2.6 மில்லியன் அதிகரித்துள்ளது.
புத்தாண்டு தினத்தன்று அதன் மக்கள்தொகை 341 மில்லியனை எட்டியது.
இவ்வாண்டு ஜனவரி மாதம் உலகளவில் ஒவ்வொரு விநாடியும் சுமார் 4.2 பிறப்புகளும் 2 இறப்புகளும் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.