மலேசியாவில் தோப்புக்கரணம் போட வைத்த காவல்துறை (Video)
மலேசியாவில் மாற்றியமைக்கப்பட்ட சைக்கிளை ஓட்டுவது சட்டப்படி குற்றம்.
basikal lajak எனும் அந்த சைக்கிள்களில் வேகக் கட்டுப்பாட்டு விசை இருக்காது…விளக்குகள் இருக்காது…
சாலையில் அத்தகைய சைக்கிள்களை ஓட்டிய இளையர்கள் சிலர் பிடிபட்டனர்.
ஆனால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை…
இளையர்கள் தோப்புக்கரணம் போட உத்தரவிடப்பட்டது!
இணையத்தில் பரவலாகக் காணப்படும் காணொளி ஒன்றில் 20க்கும் அதிகமான பதின்ம வயதினர் அதிகாரிகளின் முன்னிலையில் தோப்புக்கரணம் போடுவதைக் காணமுடிகிறது.
அதிகாரிகளின் செயலை இணையவாசிகள் பலர் ஆதரித்தனர்.
இளையர்களுக்கு அது ஒரு நல்ல பாடம் என்று அவர்கள் கூறினர்.
காவல்துறை அதிகாரிகள் அத்தகைய தண்டனையைக் கொடுத்தது வேடிக்கையாக இருப்பதாகவும் சிலர் தெரிவித்தனர்.