ATM இயந்திரம் களவாடப்பட்டது.

கனடாவில் நடந்த திருட்டுச் சம்பவம் ஒன்று அந்நாட்டைத் திகைக்கவைத்துள்ளது.

இரவு நேரத்தில் சந்தேக நபர் மண்வாரி இயந்திரத்தை வங்கியின் கதவின் மீது மோதி தானியக்க வங்கி இயந்திரத்தைத் (ATM) திருடியதாகத் தெரிவிக்கப்பட்டது.

அதன் பின்னர் அவர் மண்வாரி இயந்திரத்தை அங்கு விட்டுவிட்டு ஓட்டம் பிடித்தார். நார்த் யோர்க்கில் (North York) இருக்கும் அந்த வங்கி கடுமையாகச் சேதமடைந்தது.

டிசம்பர் 31ஆம் தேதி அதிகாலை 4.30 மணியளவில் சம்பவம் நேர்ந்ததாகக் கனடிய ஒளிபரப்பு நிறுவனம் தெரிவித்தது.

களவாடப்பட்ட தானியக்க வங்கி இயந்திரத்தில் எவ்வளவு ரொக்கம் இருந்தது என்று தெரியவில்லை.

கனடிய காவல்துறை சம்பவத்தை விசாரிக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.