நுவரெலியா பகுதியில் கடும் பனிமூட்டம் காரணமாக வாகன போக்குவரத்து தடை.
நுவரெலியா பகுதியில் நேற்று (02) காலை முதல் கடும் பனிமூட்டம் காரணமாக வாகன போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் ரதெல்லயிலிருந்து நானுஒயா வரையிலும், கம்பளை – நுவரெலியா பிரதான வீதியில் ரம்பொட முதல் நுவரெலியா வரையிலும் கடும் பனிப்பொழிவு நிலவுவதால், முன்பக்க விளக்குகளை ஏற்றி கவனமாக வாகனத்தை செலுத்துமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நுவரெலியா மாவட்டத்தில் சீரற்ற காலநிலை நிலவுவதால் அப்பகுதி முழுவதும் இருண்ட காலநிலை ஏற்பட்டுள்ளது.