பிக்பாஸ் 8 வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறப்போவது..
விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்படும் பிக்பாஸ் 8 நிகழ்ச்சி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.
கடந்த வருடம் அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி ஜனவரியில் அதாவது இம்மாதத்தில் முடிவுக்கு வர இருக்கிறது.
பிக்பாஸ் 8 வீட்டில் இருந்து அடுத்தடுத்து ஒவ்வொரு வாரமும் டபுள் எவிக்ஷன் நடந்து கொண்டிருக்கிறது. கடந்த வாரம் வீட்டில் இருந்து அன்ஷிதா மற்றும் ஜெப்ரி வெளியேறியுள்ளனர்.
பைனல் நெருங்கி வரும் நிலையில் வெற்றியாளராக யார் வருவார் என தான் ரசிகர்கள் பார்க்க காத்துக் கொண்டிருக்கின்றனர்.
எலிமினேஷனுக்கு நாமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்களில் அதிக வாக்குகள் பெற்றுள்ள போட்டியாளர்களின் விவரத்தை காண்போம்.
திபக் மற்றும் ராயன் அதிக வாக்குகள் பெற்று முதல் மற்றும் இரண்டாம் இடத்தில் இருக்க குறைவான வாக்குகள் பெற்று பவித்ரா , ஜக்குலின் மற்றும் மஞ்சரி Unofficialலாக கடைசி இடத்தில் உள்ளனர்.
இதில் மஞ்சரி தான் மிகவும் குறைவான வாக்குகள் பெற்று கடைசியில் உள்ளார்.