ஈழத்து நடிகை ஜனனி நடிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படம்.

ஈழத்து நடிகை ஜனனி அவர்களின் நடிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படம்
உசுரே.

நடிகர் டீஜே அருணாச்சலம் நடித்துள்ள உசுரே படத்தின் முதல் பார்வை போஸ்டரை லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார்.

பாடராக இருந்து அசுரன் படத்தில் நடிகராக அறிமுகமானவர் டீஜே அருணாச்சலம் தனது சிறப்பான நடிப்புக்காக வரவேற்பைப் பெற்றார்.

தற்போது, அறிமுக இயக்குநர் நவீன் டி கோபால் இயக்கியுள்ள உசுரே படத்தில் நடித்துள்ளார்.

ஸ்ரீ கிருஷ்ணா புரடகஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் நடிகை ஜனனி நாயகியாக நடித்துள்ளார்.

இயக்குநர் லோகேஷ் கனராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டு படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.



 

Leave A Reply

Your email address will not be published.