காஸா காவல்துறைத் தலைவர் , இஸ்ரேல் நடத்திய ஆகாயத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
காஸா மீது இஸ்ரேல் நடத்திய ஆகாயத் தாக்குதலில் காஸாவின் காவல்துறைத் தலைவர் மஹ்முது சாலா (Mahmoud Salah) கொல்லப்பட்டார். அவரோடு துணைத் தலைவர் ஹுசாம் சவானும் (Hussam Shahwan) மாண்டார்.
சவானைக் குறிவைத்துத் தாக்கியதாக இஸ்ரேல் சொன்னது.
தென் காஸாவில் ஹமாஸ் படைக்குத் தலைமையேற்று இஸ்ரேலைத் தாக்க அவர் திட்டமிட்டதாக இஸ்ரேலிய ராணுவம் கூறியது.
இஸ்ரேல் நடத்திய அந்தத் தாக்குதலில் 60க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் மாண்டனர்.
மாண்டவர்களில் பெண்களும் பிள்ளைகளும் அடங்குவர் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறினர்.
தாக்கப்பட்டது அல்-மவாசி பகுதி. அங்குப் பொது மக்கள் தஞ்சம் அடைந்துள்ளனர்.