தனிமை உடல்நலத்தைப் பாதிக்கலாம்.
ஒருவர் நோய்வாய்ப்படும் சாத்தியத்தைத் தனிமை அதிகரிக்கலாம் என்று புதிய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
பலவிதமான நோய்களுக்கு அறிகுறியாக விளங்கும் குறிப்பிட்ட புரதச்சத்துகள் தனிமையை உணர்வோரிடம் அதிகம் காணப்படுவதாக ஆய்வு கூறியது.
பிரிட்டனில் உயிரியல் மாதிரிகளையும் சுகாதாரத் தகவலையும் சேகரித்து வைக்கும் UK Biobank தளத்திலிருந்து 42,000க்கும் அதிகமானோரின் தகவல் ஆய்வில் பயன்படுத்தப்பட்டது.
தனிமையை உணராதவர்களுடன் ஒப்பிடுகையில் அதை உணர்வோரிடம் குறிப்பிட்ட புரதச்சத்துகள் அதிகம் இருந்ததாக ஆய்வாளர்கள் The Guardian செய்தி நிறுவனத்திடம் கூறினர்.
புரதச்சத்துகள் பெரும்பாலும் மரணத்துடன் தொடர்புடையனவாய் இருந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
புரதச்சத்துகளில் பாதி, இதய நோய், நீரிழிவு நோய், பக்கவாதம் ஆகியவற்றுடன் தொடர்புடையனவாக இருந்தன.
அத்தகைய நோய்களின் தொடர்பில் குறிப்பாக 5 வகைப் புரதச்சத்துகள் அடையாளம் காணப்பட்டதாக The Guardian சொன்னது.
அவற்றின் அளவைத் தனிமை பாதிப்பதாக ஆய்வாளர்கள் கூறினர்.
தனிமை மனநலத்தோடு உடல்நலத்தையும் பாதிக்கலாம் என்பதை ஆய்வு உணர்த்துவதாக அவர்கள் தெரிவித்தனர்.