பேருந்துகளில் இருந்து அபாயகரமான உதிரி பாகங்கள் அகற்றப்படுகின்றன.
பொதுமக்களுக்கு விபத்தை ஏற்படுத்தக்கூடிய அபாயகரமான உதிரி பாகங்களை பொருத்திய 12 பஸ்களின் சாரதிகளுக்கு எதிராக ஹட்டன் நீதவான் நீதிமன்றில் சட்ட நடவடிக்கை எடுத்து அந்த ஆபத்தான பாகங்களை அகற்றுமாறு ஹட்டன் பொலிஸ் போக்குவரத்து பிரிவு அதிகாரிகள் பணித்துள்ளனர்.
க்ளீனிங் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்துடன் இணைந்து ஹட்டனில் இருந்து புறப்பட்டு ஹட்டனை வந்தடைந்த குறுகிய தூர மற்றும் நீண்ட தூர சேவை பஸ்கள் (02) அவசர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இதன்போது 12 பேரூந்துகளில் பொருத்தப்பட்டிருந்த உதிரி பாகங்கள் அகற்றப்பட்டு ஏழு நாட்களுக்குள் ஹட்டன் பொலிஸ் போக்குவரத்து பிரிவின் அதிகாரிகளிடம் காண்பிக்கும் வரையில் பேருந்தின் வருமான அனுமதிப்பத்திரம் போக்குவரத்து திணைக்கள பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
விபத்துக்களில் பயணிகள் பேருந்துகளால் பலத்த காயங்கள் ஏற்படுவதற்கு ஆபத்தான உதிரி பாகங்கள் பொருத்தப்பட்டதே காரணம் என மோட்டார் வாகன ஆய்வாளர்கள் உறுதி செய்திருந்தனர்.
இந்த சோதனையில் பஸ்களில் பொருத்தப்பட்டிருந்த கூடுதல் ஹாரன்கள் மற்றும் கூடுதல் விளக்குகளை அகற்ற நடவடிக்கை எடுத்ததுடன், டிரைவரையும் போலீசார் கைது செய்தனர்.
நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில், மஸ்கெலியாவில் இருந்து நல்லதண்ணி பிரதேசத்திலுள்ள தோட்டங்களுக்கு பயணிகள் போக்குவரத்து அனுமதிப்பத்திரம் இன்றி கொண்டு செல்லப்பட்ட மூன்று பஸ்களுக்கு எதிராக நல்லதண்ணி பொலிஸ் அதிகாரிகள் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர்.