உள்நாட்டு இறைவரித் திணைக்களம் கடந்த ஆண்டில் அதிக வரி வருவாயை ஈட்டியுள்ளது.
2024 ஆம் ஆண்டில், உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வரலாற்றில் இதுவரை வசூலிக்கப்படாத மிக உயர்ந்த வரி வருவாயை வசூலிக்க முடிந்தது.
அந்த எண்ணிக்கை 1,958,088 மில்லியன் ரூபா என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 392,229 மில்லியன் ரூபா அதிகரிப்பு எனவும் இதன் வளர்ச்சி வீதம் 25.1 வீதம் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரலாற்றில் அதிக வரி வருவாயை வசூலிப்பதில் ஈடுபட்டுள்ளது