சிட்னி டெஸ்டின் முதல் இன்னிங்சில் பேட்டிங்கில் தடுமாறிய இந்திய அணி, 185 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
சிட்னி டெஸ்டின் முதல் இன்னிங்சில் பேட்டிங்கில் தடுமாறிய இந்திய அணி, 185 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி ஐந்து போட்டி கொண்ட ‘பார்டர்–கவாஸ்கர்’ டிராபி டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் நான்கு டெஸ்ட் முடிவில் இந்தியா, 1–2 என பின்தங்கியுள்ளது. ஐந்தாவது, கடைசி டெஸ்ட் நேற்று சிட்னியில் துவங்கியது.
உணவு இடைவேளைக்குப் பின் கோலி (17) அவுட்டானார். ஜடேஜா, ரிஷாப் பன்ட் இணைந்து போராடினர். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் ரிஷாப். 57வது ஓவரை வீசினார் போலண்ட். 4வது பந்தில் தேவையற்ற முறையில் ‘புல் ஷாட்’ அடிக்க முயன்று அவுட்டானர் ரிஷாப் (40). அடுத்த பந்தில் நிதிஷ் குமார் ‘டக்’ அவுட்டாக, இந்தியா மீண்டும் திணறியது.
ஜடேஜா 26 ரன் எடுத்து, ஸ்டார்க் பந்தில் வெளியேறினார். வாஷிங்டன் சுந்தர் (14), பிரசித் கிருஷ்ணா (3) நிலைக்கவில்லை. கடைசி நேரத்தில் பும்ரா 22 ரன் எடுத்து ஆறுதல் தந்தார். இந்திய அணி முதல் இன்னிங்சில் 185 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
ஆஸ்திரேலியா சார்பில் போலண்ட் 4 விக்கெட் சாய்த்தார்.
பின் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு கவாஜா, கான்ஸ்டாஸ் ஜோடி துவக்கம் தந்தது. இத்தொடரில் 6வது முறையாக பும்ரா பந்தில் அவுட்டானார் கவாஜா (2). முதல் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 9/1 ரன் எடுத்து, 176 ரன் பின்தங்கி இருந்தது.