பள்ளி கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து 4 வயது சிறுமி உயிரிழப்பு!
பள்ளி கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து 4 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள தனியார்ப் பள்ளியில் 4 லியா லட்சுமி என்ற சிறுமி எல்கேஜி படித்து வந்துள்ளார். இந்நிலையில், மதியம் 2 மணி அளவில் கழிவறை சென்றுள்ளார். அப்போது கழிவு நீர் தொட்டியின் மூடி உடைந்து கிடந்துள்ளது.
இதனை கவனிக்காத குழந்தை அதன் மீது ஏறிச்சென்றுள்ளது.அப்போது திடீரென கழிவு நீர் தொட்டியில் சிறுமி லியா லட்சுமி தவறி விழுந்துள்ளது. இதில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு சிறுமி உயிரிழந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் குறித்துக் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக விரைந்து வந்த காவல் துறையினர் குழந்தையின் உடல் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசரானையில் கழிவு நீர் தொட்டியின் மீது அமைக்கப்பட்டு இருந்த தகர ஷீட் சிதிலமடைந்து இருந்ததாகவும்,
அதன் மீது சிறுமி ஏறி நின்ற போது எடை தாங்காமல் உடைந்து உள்ளே விழுந்தது தெரியவந்தது. இதனிடையே சிறுமி உயிரிழந்த தகவல் அறிந்து பள்ளியின் முன் பெற்றோர் முற்றுகையிட்டுப் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.