சீனாவில் ஏற்பட்டுள்ள மனித வைரஸ் தொற்று .
சீனாவில் ஏற்பட்டுள்ள மனித வைரஸ் தொற்று தொடர்பாக அவதானித்து வருவதாக சுகாதர அமைச்சு தெரிவித்துள்ளது.
தமக்கு சீனாவின் தோற்று தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாகவும், மிகவும் அவதானமாக நிலைமைகளை கண்காணித்து வருவதாகவும், தொற்று நோயியல் பிரிவினால் இன்று(03.01) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழுமையான தகவல்களை ஆராய்ந்த பின்னர் மக்களுக்கான அறிவுறுத்தல் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.