லிட்ரோ எரிவாயுவின் விலை இம்மாதம் எவ்வித மாற்றமும் இல்லை.
ஜனவரி மாதத்தில் நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் வகையில் லிட்ரோ உள்நாட்டு எரிவாயுவின் விலை இம்மாதம் (ஜனவரி) திருத்தப்படாது என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன இன்று (04) தெரிவித்தார்.
இதன்படி, கடந்த டிசெம்பர் மாதம் இடம்பெற்ற லிட்ரோ எரிவாயுவின் விலையே தற்போதும் செல்லுபடியாகும் எனவும் திரு.குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
12.5 கிலோ கிராம் லிட்ரோ உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலை 3,690 ரூபாவாகவும், 5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 1,482 ரூபாயாகவும், 2.3 கிலோகிராம் சிலிண்டரின் விலை 694 ரூபாவாகவும் உள்ளதாக தலைவர் மேலும் தெரிவித்தார்.