விசேட தேடுதல் நடவடிக்கையின்போது 11 கிலோ தங்கம் கைப்பற்றல் .

இலங்கை கடற்படையினரால் கல்பிட்டி பட்டலங்குண்டுவ தீவு கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமான முறையில் 11 கிலோ 300 கிராம் தங்கத்துடன் கடத்திச் செல்லப்பட்ட டிங்கி படகு ஒன்று கைது செய்யப்பட்டுள்ளது.

இன்று காலை மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில், மூன்று சந்தேக நபர்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வடமேற்கு கடற்படை கட்டளைக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், கடற்படை விசேட குழுவொன்று, கல்பிட்டி, பட்டலங்குண்டுவ தீவிற்கு அப்பாற்பட்ட கடற்பகுதியில் இந்த கைது செய்யப்பட்டுள்ளது.

கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரும் கல்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். சந்தேகநபர்கள், தங்கம் மற்றும் டிங்கி படகு ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்படவுள்ளன.

கடல் வழிகளில் மேற்கொள்ளப்படும் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் பொருட்டு, கடற்படையானது தீவின் கடற்கரை மற்றும் கடற்கரையை உள்ளடக்கிய வழக்கமான ரோந்து மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.

Leave A Reply

Your email address will not be published.