சீனாவில் பரவி வரும் வைரஸ் காய்ச்சல் குறித்து தேவையற்ற அச்சம் தேவையில்லை.

குளிர் காலநிலையில் இவ்வகை வைரஸ் பரவுவது பொதுவானது என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இதற்கிடையில், பல நாடுகள் சீனாவுக்கு பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு தங்கள் குடிமக்களுக்கு அறிவித்துள்ளன.

எவ்வாறாயினும், இது தொடர்பில் சீன அரசாங்கம், தமது நாட்டுக்கு வரும் வெளிநாட்டினரின் சுகாதார நிலை குறித்து உத்தரவாதம் வழங்க முடியும் எனவும், சீனாவிற்கு விஜயம் செய்வதால் எவ்வித ஆபத்தும் இல்லை எனவும் தெரிவித்துள்ளது.

ஹியூமன் மெட்டாப்நியூமோவைரஸ் – HMPV – என்ற வைரஸ் சீனாவில் பரவி வருகிறது. இது ஒரு பொதுவான சளி, இது சுவாசிப்பதில் சிரமத்தை ஏற்படுத்துகிறது.

‘கோவிட்-19’ தொற்றுநோய்க்குப் பிறகு, சீனாவில் பரவும் வைரஸ் குறித்து உலகம் முழுவதும் இப்போது உன்னிப்பாகக் கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.