எத்தியோப்பியாவில் “Dofan” மலைத்தொடருக்கு அருகே எரிமலை வெடிப்பு.
எத்தியோப்பியாவில் உள்ள “Dofan” மலைத்தொடருக்கு அருகே ஏற்பட்ட எரிமலை வெடிப்பு காரணமாக அப்பகுதியைச் சுற்றியுள்ள மக்களை வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
டோஃபான் மலைத்தொடர் அமைந்துள்ள மத்திய எத்தியோப்பியாவில் உள்ள அவாஷ் ஃபென்டேல் மாகாணத்தில் இருந்து கடந்த சில வாரங்களில் பல சிறிய நில அதிர்வுகள் பதிவாகியுள்ளன. மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்படும் என அதிகாரிகள் கணித்துள்ளனர்.
இந்த எரிமலை நேற்று 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கத்துடன் வெடித்துள்ளது. இந்த நிலநடுக்கம் அந்நாட்டின் தலைநகரான அடிஸ் அபாபா வரை உணரப்பட்டதாக கூறப்படுகிறது.
“டோஃபான்” மலைத்தொடரைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு விரைவாக அழைத்துச் செல்லும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
அப்பகுதியில் நிலநடுக்கம் தொடரும் என்றும், எதிர்காலத்தில் அவை அதிகரிக்கலாம் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.