பும்ராவின் காயம் காரணமாக இளம் வேகப்பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா…..

இந்திய அணியின் கேப்டன் ஜஸ்பிரிட் பும்ராவின் காயம் குறித்து இளம் வேகப்பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா அப்டேட் கொடுத்துள்ளார். அதன்படி பும்ராவுக்கு முதுகு பிடிப்பு ஏற்பட்டுள்ளதால் உடனடியாக ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், மருத்துவக் குழுவின் தீவிர கண்காணிப்பில் பும்ரா இருந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா தனியாளாக போராடி வருகிறார். இதுவரை 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஜஸ்பிரிட் பும்ரா மொத்தமாக 151.2 ஓவர்கள் வீசி 32 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். இதன் மூலமாக ஆஸ்திரேலியா மண்ணில் ஒரே டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.