கதிர்காமம் பஸ்நாயக்க நிலமே மீது குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு.

கதிர்காமம் விகாரையின் பஸ்நாயக்க நிலமே திஷான் குணசேகரவுக்கு எதிராக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தற்போதைய பஸ்நாயக்க நிலமே அந்தப் பதவிக்கு தகுதியற்றவர் என்றும், அவருக்கு எதிராக குற்றவியல் வழக்கும் விசாரணைக்கு வந்துள்ளதாகவும் முறைப்பாட்டை தாக்கல் செய்துள்ள ஊழலுக்கு எதிரான புரவசி அமைப்பு தெரிவித்துள்ளது.

மஹரகம அபேக்சா வைத்தியசாலையில் வார்டு ஒன்றை நிர்மாணிப்பதற்காக கதிர்காமத்திற்கு வந்த பக்தர்களிடம் இந்த நபர் பயணச் சீட்டுகளை அச்சடித்து பணம் வசூலித்ததாகவும், அந்த நடவடிக்கையிலும் குறைபாடு இருப்பதாகவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

கதிர்காமம் விகாரையின் கருவூலம் முறையான கணக்காய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும், பஸ்நாயக்க நிலமேவின் சொத்துக்கள் மற்றும் கடன்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.