அனுமதியின்றி கல் ஏற்றிச் சென்ற லொரியை பிடித்த திசைகாட்டி யாழ்.நாடாளுமன்ற உறுப்பினர்
திருகோணமலையில் உள்ள சீமெந்து தொழிற்சாலைக்கு கற்கள் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் NPP கட்சியின் யாழ்.நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தலையீட்டினால் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் அனுமதியின்றி கல் அகழ்வு இடம்பெற்றமை தொடர்பில் பிரதேசவாசிகள் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் அவர் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் நேரில் தலையிட்டு டிப்பர் லொரியை சோதனை செய்ததில், அனுமதியின்றி கற்கள் ஏற்றிச் சென்றது தெரியவந்தது.
பின்னர் லொரி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.