சீனாவிற்கு விஜயம் செய்கிறார் ஜனாதிபதி அனுர குமார
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு எதிர்வரும் 12ஆம் திகதி சீனாவிற்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சீன அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் இந்த விஜயம் மேற்கொள்ளப்படுகிறது.
ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் அனுரகுமார திஸாநாயக்க மேற்கொள்ளும் இரண்டாவது உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயம் இதுவாகும்.
இதன் போது சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் சீன அதிகாரிகளை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்துவார் என கூறப்படுகிறது.