பசிலின் அமெரிக்க சொத்துகள் பற்றிய தகவல்களை CIDயிடம் வழங்கிய விமல் விரவன்ஸ (Video)

நெத்தலிகளை பிடிக்காமல் திமிங்கலம் போன்ற உண்மையான திருடர்களை அரசாங்கம் விசாரணை செய்வதாக இருந்தால் ,பசில் ராஜபக்சவின் சொத்துக்களை விசாரணை செய்யுமாறு அரசாங்கத்திடம் கூறுவேன் என முன்னாள் அமைச்சர் விமல் விரவங்ச தெரிவித்துள்ளார்.

நேற்று (03) காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சென்று வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ராஜபக்ச அரசில் இருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராகவும் ,அமைச்சராகவும் இருந்த விமல் வீரவங்ச, கோட்டாபய ராஜபக்ச அரசாங்க, அமைச்சுப் பதவியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட பின் ஊடகம் ஒன்றுடனான கலந்துரையாடலின் போது பசில் ராஜபக்ஷவின் பண மோசடி குறித்து தெரிவித்த கருத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளுக்காக வாக்குமூலம் பெறுவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு நேற்று (03) அழைக்கப்பட்டிருந்தார்.

அவருக்கு சட்ட உதவிகளை வழங்குவதற்காக முன்னாள் அமைச்சரான சட்டத்தரணி உதய கம்மன்பிலவும் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வந்திருந்தார்.

ஊடகவியலாளர்கள் முன்னிலையில் உண்மைகளை தெளிவுபடுத்திய விமல் வீரவன்ச, தனது முன்னைய வாக்குமூலம் தொடர்பான எழுத்துமூல தகவல்கள் அனைத்தும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டதாகவும், பசில் ராஜபக்ஷவின் அமெரிக்க சொத்துக்கள் குறித்த தகவல்கள் கோப்புகளில் உள்ளதாகவும் தெரிவித்தார்.

அத்துடன், பசில் ராஜபக்சவின் சொத்துக்களில் ஒரு குறிப்பிட்ட பகுதியே அவர் வழங்கிய தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், எஞ்சிய சொத்துக்கள் தொடர்பில் அரசாங்கத்திற்கு தேவையான தகவல்களை அமெரிக்காவிடமிருந்து மிக விரைவாக பெற்றுக்கொள்ள முடியும் எனவும் முன்னாள் எம்.பி. விமல் வீரவன்ச தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.