புதுக்குடியிருப்பு, விசுவமடு பகுதியில் திருட்டு சம்பவம் தொடர்பில் தந்தையும் மகனும் கைது.

புதுக்குடியிருப்பு விசுவமடு பகுதியில் திருட்டு சம்பவம் தொடர்பில் தந்தையும் மகனும் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த வருடம் புதுக்குடியிருப்பு விசுவமடு 10ஆம் கட்டை பகுதியில் வீடொன்றிலிருந்து தளபாடங்கள், மோட்டார் சைக்கிள் என்பன திருடப்பட்டிருந்தது.

சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளர்களால் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

அதற்கமைய புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் சந்தேக நபர்கள் திருடிய பொருட்களுடன் நேற்றையதினம்(3) கைது செய்யப்பட்டுள்ளனர்.

புன்னை நீராவி விசுவமடுவில் வசிக்கும் 72 வயதான தந்தை மற்றும் அவரது 24 வயது மகன் ஆகியோர் கைது செய்யப்பட்டதுடன், திருடப்பட்ட பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்றையதினம்(04) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.