முக சீரமைப்பு அறுவை சிகிச்சை பெற்று பயனடைந்த சிறுமி டான்யாவுக்கு வீடு வழங்கிய மு.க.ஸ்டாலின்

முக சீரமைப்பு அறுவை சிகிச்சை பெற்று பயனடைந்த ஆவடி சிறுமி டான்யாவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு வழங்கினார்.

தமிழக மாவட்டமான திருவள்ளூர், ஆவடி வீராபுரம் ஶ்ரீ வாரிநகர் பகுதியை சேர்ந்த தம்பதியினர் ஸ்டீபன்ராஜ் மற்றும் சௌபாக்யா. இவரது மகள் டான்யா (9) அரிய வகை முகச்சிதைவு நோயால் அவதிப்படுவதாக செய்திகள் வெளியாகின.

பின்னர், தமிழக முதலமைச்சர் உத்தரவின்படி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், சிறுமி டான்யாவின் வீட்டுக்கு சென்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர், சிறுமிக்கு முக அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. இதையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று சிறுமியை சந்தித்து நலம் விசாரித்தார்.

பின்னர், சிறுமி வீடு திரும்பிய பின்னரும் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்தார். ஆனாலும், முகம் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு மேலும் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதையடுத்து, சிறுமி டான்யா பள்ளி செல்லத் தொடங்கினார். அப்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறுமிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இந்நிலையில் நேற்று முக சீரமைப்பு அறுவை சிகிச்சை பெற்று பயனடைந்த சிறுமி டான்யாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு வழங்கினார்.

Leave A Reply

Your email address will not be published.