பாதாள உலக மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் வலையமைப்புகள் அடையாளம் காணப்படுகின்றன… ஊடகங்களுக்குச் தகவல் வழங்கபடாது… என்கிறார் பதில் பொலிஸ் மா அதிபர்!
பாதாள உலக செயற்பாடுகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் முதலாம் மற்றும் இரண்டாவது வலையமைப்புகள் இனங்காணப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள சட்ட கட்டமைப்பிற்குள், பாதாள உலகத்தையும் போதைப்பொருள் கடத்தலையும் கட்டுப்படுத்துவதற்கு சாத்தியமான அனைத்தையும் செய்து வருவதாகவும் பதில் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.
2024 ஐ விட அதிக செயல்திறனை அடைய 2025 எதிர்காலத்தில் செயல்படுகிறது. அரசாங்கம் எங்களுக்கு தேவையான அறிவுறுத்தல்களையும் தேவையான வசதிகளையும் சிறந்த முறையில் வழங்கியுள்ளது” என்றார்.
“பாதாள உலக செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளவர்கள் யார் என்பதை நாம் தற்போது முழுமையாக அடையாளம் கண்டுவிட்டோம். அது தொடர்பாக எங்களுக்கு தேவையான சிவப்பு நோட்டீஸ் மற்றும் நீல அறிவிப்புகள் கிடைத்துள்ளன. நேற்றும் ஒரு நபர் தொடர்பான புதிய அறிவிப்பைப் பெற்றோம்.
“அவை அனைத்தும் ஊடகங்களுக்கு வெளிப்படுத்தப்படவில்லை. தேவையான சட்ட கட்டமைப்பிற்குள் இது சம்பந்தமாக தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.