பாகிஸ்தானில் வெடிகுண்டுத் தாக்குதல்.

பாகிஸ்தானின் பலூச்சிஸ்தான் மாநிலத்தில் தொடர்ந்து கலவரம் வெடிக்கிறது.

துர்பாத் (Turbat) நகருக்குச் செல்லும் பாதையில் ராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற பேருந்து தாக்கப்பட்டது.

அந்த வெடிகுண்டுத் தாக்குதலில் குறைந்தது 6 ராணுவ வீரர்கள் மாண்டதாகவும் பலர் காயமுற்றதாகவும் பாகிஸ்தான் அதிகாரிகள் கூறினர்.

பலூச்சிஸ்தான் விடுதலைப் படை என்ற கிளர்ச்சிக்குழுவின் பேச்சாளர் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

அண்மையில் பாகிஸ்தானில் பிரிவினைவாத வன்முறை அதிகரித்திருக்கிறது.

கடந்த ஆண்டில் மட்டும் 1,000க்கும் அதிகமான ராணுவ வீரர்களும் கிளர்ச்சிப் படையினரும் மாண்டதாக ராணுவம் தெரிவித்தது.

Leave A Reply

Your email address will not be published.