மதுபோதையில் கைதிகளை புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்காக விடுவித்த காவல்துறை அதிகாரி.
தடுப்புக்காவலில் இருந்த சந்தேக நபர்கள் 13 பேரைக் காவல்துறை அதிகாரி ஒருவர் அனுமதியின்றி விடுவித்துள்ளதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
சம்பவம் ஆப்பிரிக்க நாடான ஸாம்பியாவில் நடந்தது.
புத்தாண்டுக்கு முன்தினம் மதுபோதையில் இருந்த அதிகாரி சக அதிகாரியிடமிருந்து தடுப்புக்காவல் அறையின் சாவிகளைப் பறித்துச்சென்றதாகக் கூறப்படுகிறது.
புத்தாண்டைக் கொண்டாடும்படி கூறிச் சந்தேக நபர்களை அவர் விடுவித்ததாக நம்பப்படுகிறது.
கொள்ளை, திருட்டு போன்ற குற்றங்களுக்காகச் சந்தேக நபர்கள் தடுத்துவைக்கப்பட்டிருந்ததாக BBC செய்தி நிறுவனம் சொன்னது.
அவர்கள் தற்போது தப்பிவிட்டனர்.
காவல்துறையினர் அவர்களைத் தேடும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரி கைதுசெய்யப்பட்டுள்ளதாக BBC சொன்னது.