“சீனாவில் பரவும் சளிக்காய்ச்சல் குளிர்காலத்தில் தோன்றும் வழக்கமான ஒன்றுதான்”
சீனாவில் பரவிவரும் சளிக்காய்ச்சல் குளிர்காலத்தில் தோன்றும் வழக்கமான ஒன்றுதான் என்று அந்நாடு தெரிவித்திருக்கிறது.
HMPV நோய்க்கிருமி COVID-19 போன்ற அறிகுறிகளைக் காட்டுவதாகச் சொல்லப்படுகிறது.
உலக நாடுகளிடையே குறிப்பாகப் பக்கத்து நாடுகளில் அது கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆனால் கவலைப்பட ஏதுமில்லை என்று சீனா கூறியது.
சீனாவின் மருத்துவமனைகளில் மக்கள் முகக்கவசங்களை அணிந்திருக்கும் நிழற்படங்களும் காணொளிகளும் சமூக ஊடகத்தளங்களில் காணப்படுகின்றன.
சீனா அது குறித்து அறிக்கை வெளியிட்டது.
சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் மாவ் நிங் (Mao Ning) குளிர்காலத்தில் இதுபோன்ற சுவாசத்தைப் பாதிக்கும் தொற்றுக்கிருமிகள் பரவுவது இயல்பு என்று சொன்னார்.
நாட்டு மக்கள், வெளிநாட்டினரின் நலனில் அக்கறை கொண்டுள்ளதாகச் சொன்ன அவர் சுற்றுப்பயணிகள் சீனாவுக்கு வருவது பாதுகாப்பானது என்று உத்தரவாதம் தந்தார்.