புதுடில்லியில் பனிமூட்டம் – விமானச் சேவைகள் பாதிப்பு.
இந்திய தலைநகர் புதுடில்லியில் பனிமூட்டம் காரணமாக விமானப் பயணங்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றன.
19 விமானச் சேவைகள் பாதை மாற்றப்பட்டன. பல சேவைகள் ரத்துச் செய்யப்பட்டன. 400க்கும் அதிகமான விமானங்கள் தாமதம் அடைந்தன.
இரண்டாவது நாளாக டில்லி விமான நிலையத்தை மூடுபனி வதைக்கிறது.
45க்கும் அதிகமான விமானச் சேவைகள் ரத்துச் செய்யப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் கூறினர்.
இந்தியாவின் ஆகப் பெரிய இந்திரா காந்தி விமான நிலையத்தில் தடங்கல் ஏற்பட்டதால் நாட்டின் மற்ற விமான நிலையங்களிலும் தாமதம் உண்டானதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஆண்டுதோறும் இக்காலக்கட்டத்தில் வட இந்தியாவின் பல பகுதிகளில் பனிமூட்டம் ஏற்படுவது வழக்கமானது.