இஸ்ரேலிய பிணையாளியின் காணொளியை வெளியிட்ட ஹமாஸ் (Video)
காஸாவில் ஹமாஸின் ஆயுதப்படைப் பிரிவு, இஸ்ரேலிய பிணையாளி ஒருவரின் காணொளியை வெளியிட்டிருக்கிறது.
அவர் 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம்முதல் காஸாவில் பிணைக்கைதியாக இருப்பதாகக் கூறப்பட்டது.
19 வயது ராணுவ வீரரான அந்த இளம்பெண் ஹிப்ரு மொழியில், தம்மை விடுவிக்கும்படி இஸ்ரேலிய அரசாங்கத்திடம் முறையிடும் காணொளி அது.
உங்கள் பிள்ளை பிணைக்கைதியாக இருந்தால் என்ன செய்வீர்களோ அந்த முடிவை எடுங்கள் என்று இஸ்ரேலிய பிரதமருக்கும் உலகத் தலைவர்களுக்கும் அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்திருக்கின்றனர்.
காஸா எல்லையில் இருக்கும் Nahal Oz ராணுவத் தளத்தில் இருந்து ஹமாஸ் குழுவினர் அந்தப் பெண்ணையும் மேலும் ஆறு பெண் ராணுவ வீரர்களையும் பிடித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.