சிங்கங்கள் நிறைந்த வனவிலங்குக் காப்பகத்தில் சிக்கிய சிறுவன் உயிர்பிழைத்த அபூர்வம்.
ஆப்பிரிக்காவின் ஸிம்பாப்வேயில் (Zimbabwe) 5 நாள்களாக வனவிலங்குக் காப்பகத்தில் சிக்கிய 7 வயதுச் சிறுவன் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்துள்ளான்.
5 நாள்களுக்குப் பிறகு வனத்துறை அதிகாரிகள் சிறுவனின் கால் தடங்களைக் கண்டறிந்து அவனைக் காப்பாற்றினர்.
வனவிலங்குக் காப்பகத்தில் சுமார் 40 சிங்கங்கள் இருப்பதாக BBC செய்தி நிறுவனம் தெரிவித்தது.
அதுபோக அங்கு யானைகள், வரிக்குதிரைகள், நீர்யானைகள், மான்கள் போன்றவை உள்ளன.
சிறுவன் தமது சாமர்த்தியத்தைப் பயன்படுத்தி உயிர்தப்பியதாக ஸிம்பாப்வேயின் பூங்கா, வனவிலங்கு நிர்வாக ஆணையம் கூறியிருக்கிறது.
இணையவாசிகள் சிலர் சிறுவனின் மீள்திறனைப் பாராட்டியதாக BBC செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.
“இது மனிதர்களால் புரிந்துகொள்ள முடியாததோர் அனுபவம்,” என்றார் ஒருவர்.
“உயிர்பிழைத்த சிறுவன் பள்ளிக்குத் திரும்பியதும் சுவாரசியமான கதையைச் சொல்வான்,” என்று இன்னொருவர் கூறினார்.