கடைத்தொகுதியில் தீ – 579 செல்லப்பிராணிகள் மரணம்
அமெரிக்காவின் டெக்சஸ் நகரில் இருக்கும் கடைத்தொகுதி ஒன்றில் மூண்ட தீச்சம்பவத்தில் 579 செல்லப்பிராணிகள் மாண்டன.
நேற்று முன்தினம் (3 ஜனவரி) தீயால் ஏற்பட்ட புகையைச் சுவாசித்ததால் அவை மூச்சுத் திணறி மாண்டன.
அவை அனைத்தும் Plaza Latina கடைத்தொகுதியின் செல்லப்பிராணி கடையில் இருந்ததாக ABC News செய்தி நிறுவனம் தெரிவித்தது.
பறவைகள், கோழிகள், நாய்கள், பூனைகள் முதலிய பிராணிகள் சம்பவத்தில் இறந்தன.
சுமார் 45 தீயணைப்பாளர்கள் 2 மணி நேரத்திற்குத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
ஆயினும் கடையில் இருந்த அனைத்து விலங்குகளும் மாண்டன.
தீ காரணமாக மனிதர்களுக்குப் பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால் கடைத்தொகுதியின் கட்டுமானத்திற்கு அதிகச் சேதம் ஏற்பட்டதாக ABC News தெரிவித்தது.