19 பிரபலங்களுக்கு சுதந்திரப் பதக்கம் வழங்கி கௌரவிப்பு!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பல்வேறு துறைகளில் முத்திரை பதித்துள்ள 19 பிரபலங்களுக்கு அதிபர் சுதந்திரப் பதக்கத்தை வழங்கி கௌரவித்திருக்கிறார்.

அமெரிக்காவில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் ஆக உயரிய விருதாக அது கருதப்படுகிறது.

ஹில்லரி கிளிட்டன் (Hillary Clinton), மேஜிக் ஜான்சன் (Magic Johnson), டென்ஸெல் வாஷிங்டன் (Denzel Washington) ஆகியோர் விருது பெற்றவர்களில் சிலர்.

தனிச்சிறப்புமிக்கவர்களுக்கு விருதளிக்கும் கௌரவம் தமக்குக் கிடைத்துள்ளதாக அதிபர் பைடன் கூறினார்.

அமெரிக்கக் கலாசாரத்திற்கும் லட்சியத்திற்கும் அவர்கள் பெரும்பங்காற்றியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

விருது பெற்றவர்களில் ஒருவர் மனிதாபிமான நடவடிக்கைகளில் பங்காற்றியவரும் U2 இசைக்குழுவின் பாடகருமான போனோ (Bono).

முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹில்லரி கிளிண்ட்டன் விருதைப் பெற்றுக்கொண்டபோது அனைவரும் எழுந்துநின்று கரவொலி எழுப்பினர்.

2016ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிட்டுத் தோற்ற அவர் அதிபர் பைடனின் ஆதரவாளராக இருந்துவந்துள்ளார்.

விருது பெற்ற மற்றொருவர் பிரபலத் திரைப்பட, தொலைக்காட்சி நட்சத்திரம் மைக்கல் J. ஃபாக்ஸ் (Michael J. Fox).

பார்க்கின்சன்ஸ் நோயால் அவதியுறும் அவர் அந்நோய் குறித்த ஆய்வுக்குக் குரல் கொடுத்து வருகிறார்.

ஓய்வுபெற்ற லாஸ் ஏஞ்சலிஸ் லேக்கர்ஸ் கூடைப்பந்து ஆட்டக்காரரும் வர்த்தகருமான எர்வின் மேஜிக் ஜான்சன்.

புகழ்பெற்ற நடிகர், இயக்குநர் டென்ஸெல் வாஷிங்டன் ஆகியோரும் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாராட்டப்பட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.