லைக்கா சுபாஸ்கரன் அல்லிராஜாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல்
ஸ்வர்ணவாஹினி, ஸ்ரீ FM, மொனரா TV உள்ளிட்ட இலங்கை வெகுஜன ஊடகங்களின் உரிமையை லண்டனை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் லைக்கா குழுமம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவில், லண்டனை தலைமையகமாகக் கொண்ட லைக்கா குழுமத்தின் தலைவரும் நிறுவனருமான சுபாஸ்கரன் அல்லிராஜா இலங்கை ஊடகத்துறையில் “மறைமுகமாகவும் இரகசியமாகவும்” தொழில்களை கையகப்படுத்துவதாக சிவில் செயற்பாட்டாளர் ஜமுனி கமந்த துஷார உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் ஒன்றை செய்துள்ளார்.
முக்கிய குற்றச்சாட்டுகள் :
1. வெளிநாட்டு உரிமையைக் கட்டுப்படுத்தும் இலங்கைச் சட்டங்களைத் தவிர்க்க முகவர்கள் மூலம் பரிவர்த்தனைகளை நடத்துதல்
2. இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கும் இறையாண்மைக்கும் அச்சுறுத்தல் ஏற்படலாம்
லைகா குரூப் மீடியா நெட்வொர்க்:
– தொலைக்காட்சி சேனல்கள்: மொனரா TV , ஆதவன் TV, ஸ்வர்ணவாஹினி, ETV
– ரேடியோ சேனல்கள்: சித்த எஃப்எம், ரெடி எஃப்எம், தமிழ் எஃப்எம், ஆதவன் ரேடியோ, ஸ்ரீ எஃப்எம், ரன் எஃப்எம், இ எஃப்எம்
உரிமையின் சிக்கலான அமைப்பு:
– EAP Broadcasting 60% பங்கு Ben Holdings நிறுவனத்திடம் உள்ளது
– மீதமுள்ள 40% சிங்கப்பூரின் Blue Summit Capital Management நிர்வாகத்திற்கு சொந்தமானது
– Blue Summit ஆனது போர்ச்சுகலின் Petigo Comercio Internacional Lda க்கு சொந்தமானது மற்றும் அதன் முக்கிய பங்குதாரர் சுபாஸ்கரன் அல்லிராஜா மனைவி பிரேமதர்ஷினி சுபாஸ்கரன் ஆவார்.
பாதுகாப்பு அமைச்சினால் பாதுகாப்பு அனுமதி மறுக்கப்பட்டுள்ள அகரந்தசாமி துரையப்பா ஜெயசீலன் மற்றும் நிருதன் ராஜசுந்தரம் ஆகியோர் பல நிறுவனங்களின் பங்குதாரர்கள் மற்றும் பணிப்பாளர்களாக உள்ளனர்.
மனுவில், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், அமைச்சரவை உறுப்பினர்கள், பத்து தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிசை உரிமம் பெற்றவர்கள், நிறுவன இயக்குநர்கள் அல்லிராஜா மற்றும் அவரது மனைவி உட்பட 60 பேர்களை பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிறுவனங்களின் வலையமைப்பின் ஊடாக, இலங்கையின் பரிவர்த்தனை கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறி லைக்கா குழுமம் 40%க்கும் அதிகமான உரிமையை வைத்துள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக பிதுருதலாகல போன்ற பிரதேசங்களில் ஒலிபரப்பு கோபுரங்கள் உட்பட குறிப்பிடத்தக்க ஒலிபரப்பு உட்கட்டமைப்புகளின் உரிமையானது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையலாம் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.