கனடா ரொறன்ரோவில் நெடுஞ்சாலையில் வவுனியாவை சேர்ந்த இளைஞன் வாகனத்துக்குள் மரணம்!
நேற்று முன்தினம் (4) கனேடிய பொலிஸாரால் , கனடாவில் வாழும் , வவுனியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காருக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வவுனியா செட்டிகுளம் வீரபுரம் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய ஜேக்கப் நெவில் டிலக்ஷன் என்ற இளைஞனே காரின் கதவுகள் திறக்கப்படாததால் அதில் சிக்கி இறந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த இளைஞன் உயிரிழந்த , காரை பரிசோதித்த பொலிஸாரும் இதே முடிவிலேயே இருப்பதாகவும், உயிரிழந்த இளைஞனின் மரணம் தொடர்பில் முழுமையான மருத்துவ விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கனடாவின் டொராண்டோவில் அந்த இளைஞன் இறந்த தெருக்களில் உள்ள பல சிசிடிவி கேமரா அமைப்புகளை போலீசார் சோதனை செய்துள்ளனர்.
காரை சாலையோரம் நிறுத்திவிட்டு, அந்த இளைஞன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காருக்குள் இருந்துள்ளதும் தெரியவந்துள்ளது. எவ்வாறாயினும், சம்பவம் தொடர்பில் கனடாவின் ரொறன்ரோ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.