உலகின் ஆகச் சக்திவாய்ந்த பாஸ்போட் இதுதான் ….
உலகின் ஆகச் சக்திவாய்ந்த பாஸ்போட்களின் தரவரிசையில் சிங்கப்பூருக்கு முதலிடம் கிடைத்துள்ளது.
அந்தத் தகவலை VisaGuide.World இணையத்தளம் தெரிவித்தது.
விசா இல்லாத அனுமதி, மின்னிலக்கப் பாஸ்போட் , மின்னிலக்க விசா, தரையிறங்கியதும் வழங்கப்படும் விசா ஆகிய நிபந்தனைகளை வைத்துத் தரவரிசை நிர்ணயிக்கப்பட்டது.
199 நாடுகள், வட்டாரங்களிடையே சிங்கப்பூருக்கு 91.27 புள்ளிகள் கிடைத்தன.
பின்லந்து (Finland), ஸ்பெயின் (Spain), ஜப்பான் (Japan), டென்மார்க் (Denmark), இத்தாலி (Italy) ஆகியவை அடுத்தடுத்த நிலைகளில் வந்தன.
சிங்கப்பூர் பாஸ்போட்களை வைத்திருப்பவர்கள்…
– விசா இன்றி 159 நாடுகளுக்குச் செல்லலாம்.
– மின்னிலக்கப் பயணச் சான்றிதழுடன் 10 நாடுகள் / வட்டாரங்களுக்குப் போகலாம்.
– 26 நாடுகள் / வட்டாரங்களுக்குச் சென்றுசேர்ந்தவுடன் விசா பெற்றுக்கொள்ளலாம்.
– மின்னிலக்க விசாவுடன் 14 நாடுகள் / வட்டாரங்களுக்குச் செல்லலாம்.
– 17 நாடுகள் / வட்டாரங்களுக்குச் செல்ல மட்டும் விசா தேவை.
சென்ற ஆண்டு வெளியிடப்பட்ட தரவரிசையிலும் சிங்கப்பூர் பாஸ்போட்டுக்கு முதலிடம் கிடைத்தது.