குஜராத்தில் கடலோர காவல்படை ஹெலிகொப்டர் விழுந்து நொறுங்கியதில் மூன்று பேர் பலி!

இந்திய மாநிலம் குஜராத்தில் கடலோர காவல்படை ஹெலிகொப்டர் விழுந்து நொறுங்கியதில் மூன்று பேர் பலியாகினர்.

குஜராத்தின் போர்பந்தர் விமான நிலையத்தில், இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான ALH எனும் மேம்பட்ட இலகுரக ஹெலிகொப்டர் தரையிறங்கும்போது விபத்திற்குள்ளானது.

எதிர்பாராத விதமாக ஹெலிகொப்டர் கீழே விழுந்து நொறுங்கியதில் உள்ளே இருந்த மூன்று பணியாளர்கள் பலத்த தீக்காயமடைந்தனர்.

பின்னர் அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால் அங்கு அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இச்சம்பவம் மதியம் 12.10 மணியளவில் நடந்ததாக போர்பந்தர் காவல் கண்காணிப்பாளர் பகீரத்சிங் ஜடேஜா தெரிவித்தார்.

கடலோரக் காவல் படையின் ஹெலிகொப்டர் கடலில் விழுந்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு இந்த விபத்து நடந்துள்ளது.

இந்திய கடலோர காவல்படை அதிகரிகள் மூவரின் மரணத்தை உறுதிப்படுத்தியதுடன், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.