நவராத்திரி இரண்டாம் நாள் பூஜையின் சிறப்பம்சம்.
நவராத்திரி இரண்டாம் நாள் பூஜையின் சிறப்பம்சம்.
நவராத்திரியின் 9 நாட்களில் பார்வதி, மகா லட்சுமி, சரஸ்வதி தேவிகளின் அம்சங்களை மூன்று நாள் வீதம் வழிபாடு செய்யப்படுகின்றது.
அந்த வகையில் இன்றைய இரண்டாம் நாள் நவராத்திரி வழிபாடு பார்வதியாகிய துர்க்கையை வணங்கப்போகின்றோம்.
காக்கும் கடவுளாகப் பார்க்கப்படும் துர்க்கை அம்மனை, கொற்றவை என்ற பெயரில் அழைப்பது வழக்கம்.
அந்த காலத்தில் மன்னர்கள் போருக்குச் செல்லும் போது வணங்கிவிட்டுச் சென்ற அம்மன் தான் இந்த துர்க்கையின் அம்சமான கொற்றவை தேவி.
பார்வதியின் அம்சம் தானே இந்த துர்க்கை, கொற்றவை எனும் தேவிகள். ஆனால் ஒவ்வொரு தேவியும் வேறு வேறு விதமாக் கோபமாக, உக்கிரமாக, அமைதியான பாவங்களோடு இருக்கின்றார் என்ற கேள்வி எழும்.
நாம் எப்படி வீட்டில் இருக்கும் போது வேறு மாதிரியும், வெளியில் செல்லும் போது வேறு மாதிரியும் இருப்பது வழக்கம். அந்த வகையில், எதிரிகளிடமிருந்து காக்கும் கடவுளான உக்கிரமான அம்சமாக துர்க்கை அம்மன் விளங்குகின்றாள்.
இந்த துர்க்கையை நவராத்திரியின் 2வது நாள் நாம் வழிபடுகின்றோம்.