அனைத்து வாகன ஓட்டுனர்களுக்கும் ஒரு சிறப்பு அறிவிப்பு
பேருந்துகள், பார ஊர்திகள் , முச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களிலும் பொருத்தப்பட்டுள்ள தேவையற்ற உதிரி பாகங்களை அகற்றுவதற்கு இரண்டு வார கால அவகாசத்தை பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி எதிர்வரும் 17ஆம் திகதிக்கு முன்னர் தமது வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள உதிரி பாகங்களை அகற்றுமாறு பொலிஸ் போக்குவரத்து பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 17ஆம் திகதிக்கு பின்னர் உதிரி பாகங்கள் பொருத்தப்பட்ட அனைத்து வாகனங்களுக்கும் எதிராக சட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸ் போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக்க ஹப்புகொட தெரிவித்துள்ளார்.
இதன்படி, வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள சத்தம் எழுப்பும் ஹார்ன்கள், இரும்பு கம்பிகள், தேவையற்ற மின்விளக்குகள், அலங்காரங்கள் போன்ற அனைத்து தேவையற்ற கூறுகளும் அகற்றப்பட வேண்டுமென ஹப்புகொட தெரிவித்தார்.
குறிப்பாக தனியார் பேருந்துகள் மற்றும் முச்சக்கரவண்டிகளில் இவ்வாறான தேவையற்ற உதிரி பாகங்கள் காணப்படுவதாக தெரிவிக்கும் இந்திக்க ஹபுகொட, இந்த உதிரி பாகங்களினால் பொதுமக்கள் அவதியுறுவதாகவும் வலியுறுத்தினார்.
பேருந்தில் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை பொருத்துவதால், கடுமையான ஒலி மாசு ஏற்படுவதுடன், மக்கள் அவதிப்படுகின்றனர்.
எதிர்வரும் 17 ஆம் திகதிக்குப் பின்னர், பொருத்தப்பட்டுள்ள இந்த உதிரி பாகங்களை சட்டத்தின் முன் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.