திபெத்தில் நிலநடுக்கம் – 53 பேர் மரணம்.

திபெத்தின் (Tibet) ஷிகாட்சே (Shigatse) நகரை உலுக்கிய நிலநடுக்கத்தில் குறைந்தது 53 பேர் மாண்டனர்.
60க்கும் அதிகமானோர் காயமுற்றனர்.
சீனாவுக்குச் சொந்தமான மலைப்பகுதியில்
உள்ளூர் நேரப்படி இன்று காலை 9 மணியளவில் 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகச் சீனாவின் நிலநடுக்கக் கட்டமைப்பு நிலையம் தெரிவித்தது.
இந்தியாவின் சில பகுதிகளிலும் நேப்பாளத் தலைநகர் காட்மாண்டுவிலும் (Kathmandu) வலுவான அதிர்வுகள் உணரப்பட்டதாய்க் கூறப்படுகிறது.
அந்த வட்டாரத்தில் நிலநடுக்கங்கள் ஏற்படுவது வழக்கம்.
மக்கள் தங்களது வீடுகளிலிருந்து வெளியேறுவதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்தன.
சரிந்து விழுந்த வீடுகளைக் காட்டும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகின்றன.